விடுமுறை காலத்தில் வீதிநடைமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களின் மீது கடும்தண்டனைகள் அமுலாகும் காலப்பகுதி இன்றிரவு முதல் மூன்று மாநிலங்களில் ஆரம்பமாகிறது.
நியூசவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் கன்பரா மாநிலங்களில் இன்று 18 ஆம் திகதி இரவு முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் double demerit points தண்டனை முறை அமுலாக்கப்படவுள்ளது.
இந்த மாநிலங்களில் அமுலில் உள்ள வீதிநடைமுறை மீறலுக்கான தண்டனை விபரங்கள் வருமாறு -
வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி பயன்படுத்தினால் -
New South Wales: 10 demerit points / $337 fine
Australian Capital Territory: 6 demerit points/ $557
Western Australia: 6 demerit points/ $400 fine
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் பயணம்
New South Wales: 6 demerit points/ $337
Australian Capital Territory: 6 demerit points
Western Australia: 0 demerit points/ $550
Seat belt-இருக்கைப்பட்டி அணியாமல் வாகனப்பயணம்
New South Wales: 6 demerit points/ $330 fine
Australian Capital Territory: 6 demerit points
Western Australia: 8 demerit points/ $550 fine
அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க மணிக்கு 10 கிலோமீற்றர் கூடுதல் வேகத்தில் சென்றால் -
New South Wales (exceed speed over 10 km/h): 6 demerit points/ $472 fine
Australian Capital Territory (exceeding the speed limit by less than 15 km/h): 2 demerit points
Western Australia (between 9km/h and 19km/h): 4 demerit points/ $200 fine
அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க மணிக்கு 40 கிலோமீற்றர் கூடுதல் வேகத்தில் சென்றால் -
New South Wales: 14 demerit points/ $3821 fine
Australian Capital Territory (Exceeding the speed limit by 30 km/h but less than 45 km/h): 8 demerit points
Western Australia : 14 demerit points/ $1500
இந்த double demerit points தண்டனைக்கான அடுத்த காலப்பகுதி எதிர்வரும் ஏப்ரல் 24 முதல் 28 வரை மேற்கு ஆஸ்திரேலியா தவிர நியூசவுத் வேல்ஸ் மற்றும் கன்பரா மாநிலங்களில் அமுல்படுத்தப்படும்.
