ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவின் வெற்றிக்காக, அனைவரும் காத்திருந்தபோது அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்ற விபரத்தை அறிய, லட்சகணக்கான இந்தியர்கள் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் தேடல் தளத்தில் சிந்து என்ன சாதி என்பதைப் பலர் தேடியுள்ளதை கூகுள் டிரெண்ட் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதத்தில் சுமார் இரண்டரை லட்சம் முறை சிந்துவின் சாதி கூகுளில் தேடப்பட்டிருப்பதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் முன்னரை விட 10 மடங்கு அதிகமானோர் சாதியை தேடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, ஆந்திரா-தெலுங்கானாவில்தான் தேடுதல் உச்சத்தில் இருந்துள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு சகோதர மாநில மக்களும் குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டுள்ள நிலையில் அவரது சாதியை கண்டுபிடித்துவிட்டால், மாநில அடையாளத்தை கண்டுபிடித்துவிடலாம் என்பதும் இந்த தேடுதலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம் ஒருவர் புகழ் பெறும்போது அவர் என்ன சாதி என்று அறிந்து கொள்ளும் மனநிலை இந்தியர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது என விமர்சிக்கப்பட்டுள்ளது.