SKIP TO MAIN CONTENT

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்:மெல்பேர்ன், சிட்னி முன்னிலை!

Pixabay
Source: Pixabay

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களாக மெல்பேர்ன் இரண்டாவது இடத்தையும் சிட்னி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்பேர்ன் கடந்த ஆண்டு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் அதே இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் காணப்பட்ட சிட்னி இவ்வருடம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தக்கவைத்துள்ளது.

The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 0.7 புள்ளி வித்தியாசத்தில் மெல்பேர்னைப் பின்தள்ளி வியன்னா நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

வியன்னாவுக்கு 100 க்கு  99.1 புள்ளிகளும் மெல்பேர்னுக்கு 98.4 புள்ளிகளும் சிட்னிக்கு 98.1 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

நான்காவது இடத்தில் ஜப்பானின் ஒசாகா நகரமும் ஐந்தாவது இடத்தில் கனடாவின் கல்காரி நகரமும் காணப்படுகின்றன.

அடிலெய்ட் நகரம் பத்தாவது இடத்தை தக்கவைத்துள்ள அதேநேரம் பெர்த் 14வது இடத்தையும் பிரிஸ்பேர்ன் 18வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. Vienna, Austria (99.1)

2. Melbourne (98.4)

3. Sydney (98.1)

4. Osaka, Japan (97.7)

5. Calgary, Canada (97.5)

6. Vancouver, Canada (97.3)

7. Tokyo, Japan (97.2)

8. Toronto, Canada (97.2)

9. Copenhagen, Denmark (96.8)

10. Adelaide, Australia (96.6)


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now