கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பரிசு கொடுப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதி செய்யப்பட்ட துப்பாக்கிப்படம் வரையப்பட்ட billboard -விளம்பர பலகையிலிருந்து துப்பாக்கி படத்தை நீக்குமாறு விளம்பரதாரர்களிடம் குயின்ஸ்லாந்து பொலிஸ் ஆணையாளர் Ian Stewart கோரிக்கை விடுத்துள்ளார்.
இறுக்கமான துப்பாக்கி மற்றும் ஆயுத தடைகளை பேணுகின்ற ஆஸ்திரேலியாவில் இப்படியான விளம்பரங்கள் அவசியமற்றவை என்றும் தவறான தூண்டுதல்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும் உள்ளூர் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் Ian Stewart கருத்து தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் இந்தக்கருத்தினை சமூக வலைத்தளங்களில் பலர் பலவாறாக விமர்சிக்கத்தொடங்கியுள்ளனர். ஆனால், ஏனையவர்கள் விழித்துக்கொள்வதற்கு முதல் நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
Share
