SKIP TO MAIN CONTENT

விமானம் மூலம் வந்து தஞ்சம் கோரும் அகதிகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

"El ministro belicista"
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டு மாணவர்களதும் சுற்றுலாப்பயணிகளதும் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கும்வரை விமானத்தில் வந்து இங்கு தஞ்சமடைய விண்ணப்பிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தமுடியாது என்று உள்துறை அமைச்சர் Peter Dutton சார்பில் செனட்டில் பதிலளித்த Linda Reynolds கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது தற்காலிக விசாவிலுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது பல மடங்குகளாக அதிகரித்துக்கொண்டு செல்வதாக லேபர் கட்சியின் Kristina Keneally எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவிலுள்ளவர்கள் இவ்வாறு அதிகரித்திருப்பதற்கு காரணம் விமானத்தில் வந்து இங்கு தஞ்சமடைந்தவர்கள்தான் என்று கூறிய Kristina Keneally - 2015- 2016 ஆம் ஆண்டில் 9554 என்ற எண்ணிக்கையிலும் 2016-2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18 290 என்ற எண்ணிக்கையிலுமிருந்த விமானத்தில் வந்து தஞ்சம்கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2017- 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் Linda Reynolds - வெளிநாட்டு மாணவர்களும் சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருவது அதிகரித்துச்செல்வதானது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதுதான். அதை நாங்கள் விருப்பத்துடன் எதிர்பார்க்கிறோம். ஆனால், அவ்வாறு வருகின்றவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லமுடியாது என்று இங்கு தஞ்சமடைந்துவிடுகின்றபோது தற்காலிக விசா அவர்களுக்கு வழங்கப்படவேண்டியதும் அவ்வாறானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் தவிர்க்கமுடியாதது. இது தொடர்ந்தும் நடைபெறும் என்றே எதிர்பார்க்கிறோம், இந்த உபவிளைவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொண்டுதானாகவேண்டும் -என்று அவர் கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now