SKIP TO MAIN CONTENT

விமானப்பயணம் மேற்கொள்பவர்களின் கவனத்திற்கு!

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

ஆஸ்திரேலியாவில் விமானத்தின்மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைதுசெய்யப்பட்டதையடுத்து விமானநிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி.

இதற்கு மேலதிகமாக வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்குள் விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1.    உள்நாட்டிற்குள் விமானப்பயணம் மேற்கொள்பவர்கள் ஆகக்குறைந்தது 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.

2.    வெளிநாடுகளுக்கான விமானப்பயணம் மேற்கொள்பவர்கள் ஆகக்குறைந்தது 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.

3.    Security screening துரிதமாகவும் இலகுவாகவும் செய்வதற்கேற்ப,  கொண்டு செல்லும் பயணப்பொதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துங்கள்.

4.    Security screening-இன் போது காலதாமதம் மற்றும் மேலதிக சோதனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

5.    விமானப்பயணத்தின்போது என்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம் கொண்டு செல்லக்கூடாது என்பதில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கீழ்க்காணும் இணைப்புக்களுக்குச் சென்று மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Brisbane:  http://www.bne.com.au/

Melbourne: http://www.melbourneairport.com.au/

Perth: http://www.perthairport.com.au/

Sydney: http://www.sydneyairport.com.au/

Hobart: http://www.hobartairport.com.au/

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now