SKIP TO MAIN CONTENT

வேண்டுமென்றே பிழையான திசையில் சென்று விபத்தை ஏற்படுத்திய நபர்- ஒருவர் பலி!

9news
Source: Nine Network

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

மேற்கு ஆஸ்திரேலியாவின் Capel பகுதியில் Bussell Highway யில் நபர் ஒருவர் தனது காரை வேண்டுமென்றே எதிரில் வந்த கார் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பச்சைநிற Toyota Landcruiser–ஐ ஓட்டிச் சென்ற 45 வயது நபர், சிறிது நேரம் வேண்டுமென்றே பிழையான திசையில் சென்று பல ஓட்டுநர்களைப் பயமுறுத்தியதன் பின்னர், முன்னால் வந்த வெள்ளை நிற Toyota Rav4 மீது மோதினார்.

இதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த 65 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே மரணமான அதேநேரம் மற்றொருவர் கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய நபரும் கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்த காணொளியை 9NEWS வெளியிட்டுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now