SKIP TO MAIN CONTENT

விநோதமான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஆஸி கிரிக்கெட் வீரர்!

flickr
Source: Flickr - Blogtrepreneur - (Attribution 2.0 Generic (CC BY 2.0))

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நண்பன் என்ற போர்வையில் இருட்டில் வந்து திருட்டுத்தனமாக தன்னோடு உறவு கொண்டதாக பெர்த்தை சேர்ந்த 23 வயது கிரிக்கெட் வீரர்  மீது பெண்ணொருவர் குற்றம்சாட்டியதையடுத்து அவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுவருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இங்கிலாந்தில் Worcestershire CCC அணிக்கு ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற 23 வயதான பெர்த்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரே இவ்வாறாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இருட்டில் தனது சக அணி வீரரின் தோழியுடன்  உறவுகொண்டார் என்றும் குறிப்பிட்ட பெண்ணும் தன்னோடு உறவு கொள்பவர் தனது நண்பர் என்ற நினைப்பிலிருந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய பாணியிலான பேச்சில் சந்தேகங்கொண்டு விளக்கை போட்டுப்பார்த்தபோது தான் வேறொருவருடன் உறவுகொண்டிருந்தது தெரியவந்ததாகவும் இதையடுத்து தான் பொலிஸில் முறையிட்டதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் தற்போது இங்கிலாந்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவருகிறது. எனினும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள பெர்த் கிரிக்கெட் வீரர், சம்பவம் இடம்பெற்ற அன்று குறிப்பிட்ட பெண்  தன்னுடன் உறவுகொள்ள சம்மதித்ததாக கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now