வீட்டுக்கு வீடு சென்று பொருட்களை விற்பவர்கள் அல்லது சேவை வழங்குநர்களின் முகவர்கள் அடிக்கடி உங்கள் கதவுகளைத் தட்டி தொந்தரவு செய்கிறார்களா?
இவர்களை எப்படித் தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் கீழ்க்காணும் விடயங்களைச் செய்யலாம்.
1. "No Hawkers", 'Do Not Knock' என எழுதப்பட்ட பலகையை அல்லது ஸ்டிக்கரை கதவுக்கு அருகில் ஒட்டிவிடலாம். நீங்கள் complex-இல் வாழ்ந்துவந்தால் கட்டட உரிமையாளரிடம் இதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம்.
2. விற்பனை முகவர்கள் கதவைத் தட்டும்போது திறக்காமல் விடலாம்.
3. குறித்த விற்பனை முகவரை அந்த இடத்தைவிட்டுச் செல்லுமாறு கூறலாம்.
இதேவேளை விற்பனை முகவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.
1. "No Hawkers", 'Do Not Knock' போன்ற வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ள வீட்டின் கதவுகளை விற்பனை முகவர்கள் தட்டக்கூடாது.
2. வீட்டின் உரிமையாளர் அந்த இடத்தைவிட்டுச் செல்லுமாறு சொன்னவுடன், விற்பனை முகவர்கள் அங்கிருந்து அகல வேண்டும். அத்துடன் 30 நாட்களுக்குள் மீண்டும் அந்த வீட்டிற்குத் திரும்பிச்செல்ல முடியாது.
3. ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் காலை 9 மணிக்கு முன்னரோ மாலை 6 மணிக்குப் பின்னரோ நுகர்வோரின் வீட்டுக் கதவுகளைத் தட்டமுடியாது.
4. வீடு வீடாகச் செல்லும்போது தமது அடையாள அட்டையைக் காட்டுவதுடன், தமது மற்றும் தாம் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் விபரங்களைக் கூற வேண்டும்.
மேற்கூறியவற்றைச் செய்யத்தவறும் விற்பனை முகவர்கள் தொடர்பில் அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்திடம் முறையிடலாம். அது பலனளிக்கவில்லை என்றால் Australian Competition and Consumer Commission-இல் முறைப்பாடு செய்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இதேவேளை மேற்கூறிய நிபந்தனைகள் வீட்டுக்குவீடு செல்லும் விற்பனை முகவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வீட்டுக்குவீடு சென்று நிதி சேகரிக்கும் தொண்டுப் பணியாளர்கள் மற்றும் சமயக்குழுக்கள் போன்றவை வேறு பிரிவுகளின் கீழ் அடக்கப்பட்டுள்ளன.
