ஆஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison-இன் தேர்தல் வெற்றி குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்றும் தான் ஏற்கனவே கணித்துக்கொண்டதைப்போல அவர் வெற்றிபெற்றிபெற்றிருக்கிறார் என்றும் ஜி - 20 மாநாட்டுக்கு முன்னதாக அரசுத்தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் Scott Morrison தலைமையிலான அரசு வெற்றிபெற்றது ஏனையவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் Morrison வெற்றி பெறுவார் என்று தான் முன்னமே கணித்திருந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
தான் நினைத்ததுபோலவே Morrison வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
சந்திப்பில் கலந்துகொண்ட Scott Morrison - அமெரிக்காவுடனான ஆஸ்திரேலிய உறவு குறித்த பெருமைகளை எடுத்துக்கூறினார். நூற்றாண்டுகளுக்கும் பழமைவாய்ந்த உறுதியான இரு நாட்டு உறவினை நினைவு கூரிய Morrison, அமெரிக்காவுடனான படைத்துறை உறவு குறித்தும் எடுத்துக்கூறினார். ஆஸ்திரேலியாவின் உதவி அமெரிக்காவுக்கு எப்போதும் உண்டு என்றும் Scott Morrison தெரிவித்தார்.
Share
