SKIP TO MAIN CONTENT

வாரத்துக்கு 50 டொலருக்குள் வாழ்க்கை நடத்த பணிக்கப்பட்டுள்ள மனுஸ் அகதிகள்!

An asylum seeker on Manus Island before the facilities closed.
An asylum seeker - File image Source: AAP

1 min read

Published


Skip to article content

பப்புவா நியூ கினியின் மனுlஸ் தீவிலிருந்து தலைநகர் Port Moresby -க்கு இடமாற்றப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அகதிகளுக்கு வாரத்துக்கு 50 டொலர்கள் மாத்திரம் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அகதிகள் மனுlஸ்தீவிலிருந்து Port Moresby பிரதேசத்துக்கு மாற்றப்பட்டபோது தங்குமிட  உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும்- தற்போது அகதிகளை தங்கிக்கொள்ளுமாறு கூறப்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்ட பிரதேசங்கள் ஆயுத முனையில் பல தடவைகள் கொள்ளையிடப்பட்டன என்றும் அங்குள்ள அகதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்கிருந்து வெளியேறும்போது தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறுவருடங்களாக அகதிளாகவே இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு இதுதான் என்று அங்குள்ள அகதிகள் சமூகவலைத்தளங்களின் ஊடாக தங்களது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now