சிட்னியில் வாகனம் ஓட்டுபவர்கள், வாரமொன்றுக்கு 25 டொலர்கள் அல்லது அதற்கு அதிகமாக toll எனப்படும் வீதிக்கட்டணங்களில் செலவிட்டால், அவர்களுக்கான car registration இலவசமாக்கப்படுமென நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier Gladys Berejiklian அறிவித்துள்ளார்.
சிட்னியிலுள்ளவர்கள் M2, M7, M4, M5, Eastern Distributor, Cross City Tunnel, Lane Cove Tunnel ,Sydney Harbour Bridge & Tunnel ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது கட்டணம் செலுத்த வேண்டி நேரிடுகிறது.
இதுதவிர கட்டணம் அறவிடப்படும் புதிய toll வீதிகளும் உருவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ள பின்னணியில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திட்டமானது கடந்த ஜுலையிலிருந்து கணக்கிடப்படவுள்ளதால், இதற்குத் தகுதிபெறுவர்கள் அடுத்த வருடம் ஜுலை முதல் தமது இலவச rego-வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை குறித்த திட்டமானது, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுக்கு வருடமொன்றுக்கு 100 மில்லியன் டொலர்கள் செலவை ஏற்படுத்தும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்க இத்திட்டம் உதவுமென, நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier Gladys Berejiklian கூறினார்.
