விடுமுறை நாட்களில் வேலைசெய்யும் hospitality, retail, pharmacy மற்றும் fast-food துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் penalty rates-உடனான அதிக கொடுப்பனவில் லிபரல் அரசு மாற்றம் கொண்டுவந்திருந்தநிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் அதிக கொடுப்பனவு நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படும் என லேபர் கட்சி உறுதியளித்துள்ளது.
லேபர் கட்சி இது தொடர்பாக கூறியபோது - விடுறைக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு கொடுக்கவேண்டிய கூடுதல் ஊதியமுறையை லிபரல் ஆட்சி இயந்திரம் கடந்த 2017 இல் மாற்றியது .
இந்தமுறை ஈஸ்டரில் பத்து நாட்கள் விடுமுறை நாட்களாக கிடைக்கப்பெற்றபோதும் இந்த நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 220- முதல் 370 டொலர்கள் கூடுதல் ஊதியம் தற்போதைய லிபரல் ஆட்சியினரால் பறிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் லிபரல் ஆட்சியினரால் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறையை நீக்குவதற்கு 8 தடவைகள் லேபர் கட்சி எதிராக வாக்களித்தது. ஆனால், லிபரல் கட்சி அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.
லேபர் கட்சி ஆட்சிக்கு வருமானால் - தேர்தல் இடம்பெறப்போகும் மே 18 ஆம் திகதியிலிருந்து - நூறு நாட்களில் இந்த விடுமுறை நாள் பணியாளர்களுக்கான கூடுதல் ஊதியத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரும் - என்று உறுதியளித்துள்ளது.
