SKIP TO MAIN CONTENT

விடைபெறுகின்றது ஆஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனம்!

wikimedia
Source: Wikimedia

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக நீண்டகாலம் சந்தையில் கோலோச்சிய Toyota Tarago 36 வருடங்களுக்கு பிறகு விடைபெறுவதாக Toyota நிறுவனம் அறிவித்துள்ளது.

1983 இல் சந்தைக்கு வந்த இவ்வாகனம் உடனடியாகவே ஆஸ்திரேலிய குடும்பங்களின் விருப்பத்துக்குரியதாக மாறியது.

80 - 90 களில் பெரிய குடும்பங்களின் விருப்பத்துக்குரிய வாகனமாக வசீகரித்துக்கொண்ட - 12 ஆசனங்களைக்கொண்ட - Toyota Tarago சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் விற்பனையில் ஏற்பட்டுவருகின்ற வீழ்ச்சியினால் Toyota Tarago வாகனத்துக்கு இந்த வருட இறுதியுடன் விடைகொடுப்பதற்கு Toyota நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

இதே வசதிகளுடன் அதி நவீன - கூடுதல் தொழில்நுட்ப தரத்துடன் Granvia ரக வாகனங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு Toyota அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now