வாடகைக்காருக்குள் (Taxi) வாந்தியெடுப்போர் மற்றும் குப்பைகளை போட்டுச்செல்வோருக்கு 120 டொலர்களை அபராதத்தொகையாக அறவிடும் புதிய சட்டம் விக்டோரியாவில் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
விக்டோரியாவின் அத்தியாவசிய சேவைகள் ஆணையகம் இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறது.
வாடகைக்காருக்கான பணம் மற்றும் மேலதிக கட்டணங்கள் தொடர்பாக பரிசீலித்த ஆணைக்குழு பயணக்கட்டணங்கள் குறித்த எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், பயனாளர்கள் வாகனத்தை பயன்படுத்தும் முறை குறித்தும் இது விடயத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்பவர்களுக்கு அபாரதம் விதிக்கவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளினது அடிப்படையில் 120 டொலர்கள் அபராதத்தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனத்துக்குள் குளிர்பானங்களை ஊற்றுபவர்கள், உணவுப்பொருட்களை கொட்டிச்செல்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள் போன்றோருக்கு மேற்படி அபராதம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
