AstraZeneca நிறுவனம் Covid 19 இற்கான தடுப்புமருந்து தொடர்பான phase 3 clinical trials -மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்படி இந்த பரிசோதனையை இடைநிறுத்தவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று குறித்து ஆராய்வோம்.
Covid 19 இற்கான தடுப்புமருந்தின் phase 3 clinical trials - 3 ஆம் கட்ட ஆய்வில் அமெரிக்காவில் மட்டும் 30000 volunteers – தன்னார்வ தொண்டர்கள் இதற்காகத் திரட்டப்பட்டு நாடு தழுவிய ரீதியில் 80 வெவ்வேறு இடங்களில் இந்த மூன்றாம் கட்ட ஆய்வில் கலந்துகொள்கிறார்கள். பிரிட்டன், ஜப்பான், இந்தியா, தென்னப்பிரிக்கா, பிரேஸில், பெரு,ரஷ்யா என்று பல நாடுகளில் இந்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை AstraZeneca நிறுவனம் முன்னெடுத்துள்ளது. சுமார் 50000 பேர் சர்வதேசரீதியாக இந்த ஆய்வில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளார்கள்.
இப்படியான பரிசோதனையில் பிரிட்டனில் இந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண் ஒருவருக்கு, தடுப்பு மருந்து ஏற்றியதன் பின்பு, transverse myelitis என்ற அபூர்வமானதும் கடுமையானதுமான spinal inflammatory disorder முள்ளந்தண்டில் ஏற்படும் வீக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. உடனடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இப்போது குணமாகி வீடுதிரும்பியுள்ளதாக AstraZeneca நிறுவனத்தின் CEO தலைமை நிறைவேற்று அதிகாரி Pascol Soriot அறிவித்தார்.

Source: Nucleus Network/ABC
தசைகளின் பலவீனம் (Muscle weakness), முடக்குவாதம் (paralysis), சிறுநீரகக் கோளாறு (bladder problem) மற்றும் வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய இந்த நோய்க்கும் பரிசீலிக்கப்பட்டுவரும் Covid 19 இற்கான தடுப்பு மருந்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்வுகள் பிரிட்டனில் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது மூன்றாம் கட்ட ஆய்வைத்தெடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பெருந்தொகையானவர்கள்- 50000 பேர் இந்த phase 3 clinical trials இல் கலந்துகொள்ளவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி நமக்கு பிறக்கலாம்.
சாதரண மருந்துகளைப் பொறுத்த அளவில் சுமார் 1000 தொடக்கம் 3000 பேர் வரை மட்டுமே phase 3 clinical trials இல் கலந்துகொள்வார்கள். ஆனால் இது சர்வதேசரீதியாக வியாபித்துள்ள pandamic- கொள்ளைநோய்க்கான தடுப்பு மருந்து என்ற வகையில் பல்லாயிரக்கணக்கானவர்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக இந்த தடுப்பு மருந்தின் safety and efficacy அதாவது இந்த மருந்து பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை உறுதிசெய்யவேண்டிய தேவை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இருக்கிறது.

Geliştirilecek aşıların yarısının şimdiden zengin ülkelerce rezerve edildiği bildirildi. Source: AAP
அமெரிக்காவில் பல்வேறு இனப்பிரிவுகள், புவியியல் குழுக்கள்- race, ethnic groups, geographic groups, இவற்றிலிருந்து நலமாக இருக்கின்றவர்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் (underlying medical conditions) HIV அல்லது Aids என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலரும் இந்த ஆய்வில் இணைத்துக்கொள்ளப்படுகின்றார்கள். இந்த 30000 பேரில் சுமார் 20000 பேர் -தோராயமாக கணினியால் தெரிவுசெய்யப்பட்டு (randomly selected) மருந்து தயாரிப்பு நிறுவனமான Astrazeneca வின் பரீட்சார்த்த தடுப்பு மருந்தான AZD1222 (இந்த குறியீடு பரீட்சார்த்த காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்), அவர்களுக்கு நான்கு வார இடைவெளிவிட்டு இரண்டு dose மருந்தளவு தரப்படும். மீதி 10000 பேருக்கு placebo என்ற உப்பு நீர் saline ஏற்றப்படும்.
யாருக்கு என்ன கொடுக்கப்படுகிறது என்பதைக் கணினிகள் தீர்மானிக்கும். மருந்து ஏற்றப்பட்டவருக்கும் தனக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது சாதாரண saline ஏற்றப்பட்டிருக்கிறதா என்பது தெரியாது. மருந்தை ஊசிமூலம் ஏற்றியவருக்கும் கொடுக்கப்பட்டது நிஜ மருந்தா அல்லது placeboவா என்பது தெரியாது. அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
இந்த placebo என்ற வெறும் உப்பு நீரை 10000 பேருக்கு கொடுப்பதன் நோக்கமென்ன என்ற கேள்வி நமக்கு எழலாம். இல்லையா?
பரிசோதனை செய்யப்படும் ஒரு மருந்தின் செயல்திறன் குறித்து முடிவுசெய்வதற்காக இந்த placebo controlled trial என்ற முறை செயல்படுத்தப்படுகிறது.
‘மனம் எனும் மாமருந்து’ என்று சொல்வார்கள். எண்ணங்களுக்கும் உடலின் செயற்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. மருந்தை உட்கொள்வதால் தனக்கு குணமாகிவிடும் என்று நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கை காரணமாக நோய் குணமாகிவிடுவதுண்டு. அதே வேளையில் தான் உட்கொண்ட மருந்து காரணமாகப் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று சதா சர்வகாலம் யோசித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அக்குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது போன்ற உணர்வு ஏற்படலாம். இதை placebo effect என்று சொல்வார்கள். Placebo effect என்பது, மனம் அல்லது எண்ணங்கள் எவ்வாறு உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டும் ஆய்வாகும்.
இந்த placebo சோதனைக்காக பயன்படுத்தப்படும் saline திரவத்தை எடுத்துக்கொண்டவர்களையும் உண்மையான தடுப்பு மருந்தை எடுத்தவர்களையும் ஒப்பீட்டு அளவில் மதிப்பீடு செய்து, உண்மையான மருந்தின் பாதுகாப்பு, செயல்திறன் என்பன நிரூபிக்கப்படும். இப்படி மூன்றாம் கட்ட ஆய்வுகள் (phase 3 clinical trials) நிறைவடைந்த பின்னர், மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காகத் தயாரித்து விநியோகிக்க அங்கீகாரம் பெறுவதற்கு, இந்த placebo controlled trial பெறுபேறுகள் regulatory bodies என்ற அரச நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப் படவேண்டும்.

Source: APP
உலகில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆய்விலிருக்கும் நிலையில் ஒவ்வொன்றும் வேறுபட்ட தொழில் நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு வாங்க முயற்சிக்கும் AstraZeneca வின் AZD1222 தடுப்பு மருந்து தனி அணுகுமுறையை கையாள்கிறது.
இந்த தடுப்புமருந்து Oxford பல்கலைக்கழகம், Vaccitech என்ற நிறுவனத்தின் அணுசரணையுடன் கண்டுபிடித்த தடுப்பு மருந்தாகும். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கான அனுமதியை AstraZeneca நிறுவனம் பெற்றிருக்கிறது. Covid 19 என்ற நோயை ஏற்படுத்தும் SARS- CoV-2 என்ற வைரஸில் உள்ள புரதப்பகுதியொன்றின் gene எனப்படும் சந்ததிச்சுவடு, adenovirus என்ற சாதாரண flu வை ஏற்படுத்தும் வைரஸில் ஏற்றப்பட்டு உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

Source: AFP
Covid 19 இற்கு எதிரான immune system எனப்படும் நோய் எதிர்புச்சக்தியை உந்திவிடும் விதமாக இந்த antivirus வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எந்த ஒரு தடுப்பு மருந்திற்கும் பயன்படுத்தபட்டதில்லை என்றபோதும், Ebola வைரஸ் போன்ற மிகக் கொடிய வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளின் ஆராய்சிகளின் போது இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தவருட நடுப்பகுதியில் AstraZeneca வின் தடுப்புமருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது. ஆய்வுகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் திட்டமிட்டபடி தடுப்புமருந்துகள் இங்கு வந்து சேரும் என்று Federal நலத்துறை அமைச்சர் Greg Hunt கூறியிருக்கிறார். இருந்தபோதும் phase 3 clinical trials இன்போது பல பின்னடைவுகள் ஏற்படக்கூடும்.

Source: AAP
பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த ஆய்வில் கலந்துகொள்ளும் நிலையில் ஒருவருக்கோ பலருக்கோ கடுமையான பக்கவிளைவுகள் serious medical conditions என்ற தீவிர உடல் கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்படி ஏற்பட்டு அவை தடுப்பு மருந்தின் பாதிப்பால் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படும் நிலையில் இந்த தடுப்புமருந்தின் phase 3 clinical trials இல் தாமதங்கள் ஏற்படலாம். இது பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மூன்றாம் கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில் ஆஸ்திரேலியா உட்பட ரஷ்யா, தென்கொரியா, ஜப்பான், சீனா, பிரேஸில், லத்தின் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிற்கு சுமார் 300 கோடி dose-களை விநியோகிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லோருக்கும் சமவாய்ப்பின் அடிப்படையில் இதை விநியோகிப்பதை உறுதிசெய்வதே தமது கொள்கை என்று AstraZeneca அறிவித்துள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
