Vaccination Passports: ஆஸ்திரேலியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

Passports- கடவுச்சீட்டுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். இப்போது Vaccination Passports பற்றி பல நாடுகள் பேசத்தொடங்கியிருக்கின்றன. Vaccination Passports என்றால் என்ன?

'COVID-19 vaccinated' sign displayed on a phone screen, passports, medical syringes and a face mask are seen in this illustration photo taken in Krakow, Poland on April 28, 2021

Certificado internacional de vacinação para quem tomou as duas doses Source: Porzycki/NurPhoto via Getty Images

ஆஸ்திரேலிய எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக வெளிநாட்டுப்பயணங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும் Lockdowns - முடக்க நிலை, Border closures - எல்லைகள் மூடப்பட்டிருத்தல், mass event cancellation- திரளானோர் ஒன்று கூடக் கூடிய நிகழ்வுகள் ரத்துச்செய்யப்படுதல், schools closures - பாடசாலைகள் மூடப்பட்டிருத்தல் என்பவற்றுக்கு மீண்டும் எம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலிலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் செளகர்யங்கள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியைப்பெற Passports - கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவதுபோல, இன்றைய Covid 19 பின்னணியில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் அல்லது மற்றொரு மாநிலத்திற்குள் நுழைய ; நாட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது நிகழ்விற்குச் செல்ல அனுமதியைப் பெறுவதற்காகத் தேவைப்படக்கூடிய document- அல்லது ஆவணம் இப்போது Vaccination Passports என்ற பெயரில் அறியப்படுகிறது.
A French passeport and an International Certificate of Vaccination or Prophylaxis are seen in an illstration pictures on February 19, 2021 in Brussels, Belgium. Back is the famous statue of the Manneken-Pis. - Photo by Monasse T/ANDBZ/ABACAPRESS.COM.
A French passeport and an International Certificate of Vaccination Source: AAP


இதைப் passport என்று சொல்வதைவிட vaccination certificate ‘தடுப்புமருந்து ஏற்றிக்கொண்டுள்ளதற்கான சான்றுப்பத்திரம்’என்று சொல்லலாம் என்ற போதும், கடவுச்சீட்டுபோல ஒரு இடத்தைக் கடந்து செல்வதற்கான அனுமதிக்காக இது இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதால் Vaccination Passports என்று அழைக்கப்படுகிறது. இது காகித வடிவில் அமைந்த ஆவணமாகவோ அல்லது digital என்ற மொபைல் போன்களில் வைத்துக்கொள்ளக்கூடிய ‘எண்ம ஆவணமாகவோ’ இருக்கலாம்.

இந்த vaccination Passports களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு அல்லது இடத்திற்குச் செல்ல அனுமதிபெறுவது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

இந்த vaccination Passports வைத்திருப்பவர்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும்போது, நாட்டின் எல்லைகளில் இருக்கக் கூடிய testing centre- சோதனை நிலையங்களில், தனக்கு நோய்த்தொற்று உள்ளதா என்ற சோதனைக்கு உட்படத்தேவையில்லை; நாட்டில் நுழைவதற்கு முன், தான் புறப்பட்ட இடத்தில் 72 மணித்தியாலங்களுக்குள் சோதனை செய்து கொண்டுள்ளதை நிரூபிக்கத்தேவையில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக, நுழையும் நாட்டுக்குள் 14 நாள் கட்டாய quarantine என்ற தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தேவையில்லை என்று Centers for Disease Control and Prevention என்ற நிலையங்கள் அறிவித்திருக்கின்றன. இருந்தபோதும் இந்த தளர்வுகள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும் என்பதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

தற்போது எந்தெந்த நாடுகள் இந்த vaccination passport களை அங்கீகரித்திருக்கின்றன?

சீனா, digital vaccination passport ஐ சென்ற மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை smart phone களில் தரவிறக்கக் கூடிய ஒரு app மூலமாக தரவிறக்கிக்கொள்ளமுடியும். QR code ஐ scan செய்வதன் மூலம் ஒருவரது vaccination certificate ஐப் பார்க்க முடியும் . ஜப்பான் இதே போன்ற ஒரு digital passport ஐ அடுத்த வாரம் செயல்படுத்தவுள்ளது.
QR Codes
Source: Pixabay /geralt
ஐரோப்பிய ஒன்றியம் Digital Green Certificate என்ற பத்திரம் ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தப் பத்திரம், ஒருவருக்கு தடுப்புமருந்து எத்தனை dose கள் ஏற்றப்பட்டுள்ளன; அல்லது Covid 19 test செய்யப்பட்டு negative என்ற result வந்திருக்கிறதா; எப்போது அந்த சோதனை செய்யப்பட்டது; அல்லது அவர் covid 19 ஆல் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரா என்பன போன்ற எல்லா தரவுகளையும் கொண்டிருக்கும் என்றும் இதைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் 14 நாடுகளுக்கு பயணஞ்செய்ய முடியும் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்கா vaccination Passports பற்றிய ஒரு திட்டத்தைப் இதுவரை பிரேரிக்கவில்லை என்றபோதும் அங்குள்ள பல நிறுவனங்கள் இதற்கான app களை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் நாட்டுக்குள் நுழைபவர்கள் entry point என்ற இடங்களில் Covid 19 சோதனை செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போதும் அங்கு அமுலில் உள்ளது. தடுப்புமருந்து இரண்டு dose களும் எடுத்துக்கொண்டவர்கள் நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று Centre for Disease Control and Prevention என்ற அமைப்பு அறிவித்திருக்கிறது.

பிரான்ஸில் கலாச்சார மற்றும் விளையாட்டு, திரையரங்கு, நாடக அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பவற்றுக்குச்செல்ல அனுமதி பெற, தடுப்பு மருந்து ஏற்றப்பட்டதற்கான அல்லது சோதனையில் negative என்ற result கிடைத்ததற்கான அல்லது நோய்தொற்றி குணமடைந்ததற்கான ஆதாரங்களுள் ஏதாவது ஒன்று சமர்ப்பிக்கப்படவேண்டும். இந்த கட்டுப்பாடுகள், உணவு விடுதிகள் அங்காடிகள் என்பவற்றிலும் பின்பற்றப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக அண்மையில் அங்கு எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.

Vaccination Certificate அல்லது Vaccination Passports என்பது புதியதொன்றல்ல. பிரேஸில், கானா (Brazil, Ghana) போன்ற நாடுகளுக்குள் நுழைய, yellow fever என்ற மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்து ஏற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு காலங்காலமாக இருக்கிறது.
A Police officer checks a COVID-19 Green passport at the Bregana border between Croatia and Slovenia, 02 June 2021. From 02 June 2021, Croatia give to its citizens COVID-19 passports and also check other EU countries citizens passport with QR codes
Source: AAP Image/EPA/ANTONIO BAT

இந்த Vaccination Passport-களை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன?

பல சவால்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றைப்பார்ப்போம். AstraZeneca, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கும் தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட AstraZeneca தடுப்பு மருந்தைத்தான் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது. இதைத்தவிர Pfizer vaccine உட்பட நான்கு தடுப்பு மருந்துகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தயாராகும் AstraZeneca தடுப்புமருந்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான regulatory agencies - அனுமதி வழங்கும் நிறுவனம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்தைப்பெற ஆஸ்திரேலிய அரசு ஆவன செய்யவேண்டும். ஆகவே ஆஸ்திரேலியாவில் பெரும்பாலனோருக்கு தடுப்பு மருந்து ஏற்றப்படும் பட்சத்தில் அனைவரும் சுதந்திரமாக வெளிநாடு போகலாம் என்பது இப்போது வாதத்திற்கு உள்ளாகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட AstraZeneca தடுப்புமருந்தை Spain, France, Italy, Sweden, Romania, Greece, Poland, Germany மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன.

இதேபோல Covishield என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்புமருந்தை பல ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. பிரிட்டனில் 50 லட்சம்பேர் Covishield ஏற்றிக்கொண்டுள்ளதாகவும், இவர்களுள் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயலும் போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் AstraZeneca தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு மாநில வாரியாக கட்டுப்பாடுகள் வேறுபடுகின்றன. உதாரணமாக Florida மாநிலம் பயணிகளிடம் தடுப்புமருந்து ஏற்றிக்கொண்டதற்கான அத்தாட்சி கேட்கப்படக்கூடாது என்று அறிவித்திருக்கிறது.
AstraZeneca COVID-19 Vaccinations For Over 50s Resume In Australia
Source: Getty Images AsiaPac
ஆகவே எந்த தடுப்பு மருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, எந்த நாட்டுக்கு பயணம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, நிலைமைகள் வேறுபடுவதால் Vaccination Passports தொடர்பாக ஒரு குழப்ப நிலை நிலவுகிறது. இதை தெளிவாக வரையறை செய்ய முடியாத தால் பல நாடுகள் Vaccination Passports தொடர்பான முடிவுகளை எடுக்காமல் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில், Vaccination Passports வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா?

ஒரு தடுப்புமருந்தின் இரண்டு dose களும் ஏற்றிக்கொண்ட பின் ஒருவருக்கு immunity என்ற நோயெதிர்ப்புத்திறன் ஏற்பட்டிருக்கும் என்பதே பொதுவான கருத்தாகும். இவ்வாறு தடுப்பு மருந்து இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்கள் Express Plus Medicare app மூலமாக vaccination certificate ஒன்றை digital வடிவில் தரவிறக்கிக்கொள்ள முடியும். அல்லது print செய்துகொள்ளமுடியும். ஆனால் இதை ஒரு அத்தாட்சியாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளளாமே தவிர இதைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளமுடியாது. வேறு எந்த சந்தர்ப்பங்களில் இதை பயன்படுத்தலாம் என்ற அறிவித்தல்களும் இல்லை.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய vaccination Passports களை எதிர்வரும் எதிர்வரும் அக்டோபர் மாதந் தொடக்கம் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று பிரதமர் Scott Morrison அறிவித்திருக்கிறார். இதை எந்தெந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதேவேளையில் இங்கு மாநிலங்களுக்குடையேயும் Covid 19 கட்டுப்பாடுகள் குறித்து ஒருமித்த கருத்து இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By R.Sathiyanathan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand