உலகின் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் பெட்ரோல்களில் மிக மோசமானது எனக் கருதப்படும் சாதாரண-regular unleaded பெட்ரோலைத்தான், ஆஸ்திரேலியாவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக OECD எனப்படும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் 35 நாடுகளில், ஆஸ்திரேலியாவிலேயே தரமற்ற பெட்ரோல் விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப்பின்னணியில் சாதாரண unleaded பெட்ரோலை நாட்டில் தடை செய்வதற்கான முனைப்புகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா பயன்படுத்தும் எரிபொருளின் தரம் உயர்த்தப்படும் அதேநேரம் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதுடன் மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கும் உதவும் என அரசு கருதுகின்றது.
அந்தவகையில் அடுத்த இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்குள் சாதாரண unleaded பெட்ரோல் நாட்டில் தடைசெய்யப்பட்டு அனைவரும் Premium unleaded பெட்ரோலைப் பயன்படுத்த நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
சாதாரண unleaded பெட்ரோலை விட Premium unleaded பெட்ரோல் லீட்டருக்கு 10.7 சதங்கள் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் பெற்றோலுக்கான செலவு கணிசமாக உயரலாமென்பது குறிப்பிடத்தக்கது.
Share
