சிட்னியில் பீஜியை பூர்வீகமாக கொண்ட தாயொருவர் தனது வளர்ப்பு மகனால் nail gun எனப்படும் கருவியால் சுடப்பட்டு படுகாயடைந்தநிலையில் ஆஸ்பத்திரியில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார்.
நேற்றுமுன்தினம் nail gun-இனால் தலையில் இரண்டு மூன்று தடவைகள் சுடப்பட்டார் என்று கூறப்படும் ராகினி நாராயண் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் நிரந்தரமான மூளைச்சிதைவுக்கு உள்ளாகியுள்ளாரா என்பதை அறியும் தீவீர சிகிச்சை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 10.30 மணியளவில் ராகினி நாராயணனின் வளர்ப்பு மகனான ஆகாஷ் நாராயண் (வயது 20) தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வீட்டைவிட்டு ஓடியிருந்தார் என்றும் மறுநாள் காலை 2.45 மணியளவில் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆகாஷ் நாராணயனுக்கு பிணை மறுக்கப்பட்டதையடுத்து, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் கூறுகையில் - தாக்குதலுக்கான காரணம் குறித்து தமக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தாக்குதலை நடத்தியவர் nail gun எனப்படும் கருவியை தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறார் என்றும் தாக்குதலில் ராகினி நாராயண் பாரதூரமானளவுக்கு படுகாயமடைந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
Share
