ஆஸ்திரேலியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக குயின்ஸ்லாந்தில் பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் குயின்ஸ்ந்திலுள்ள ஸ்ட்ராபெரி பண்ணையொன்றில் முன்னர் பணிபுரிந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
வஞ்சம் தீர்ப்பதற்காக அவர் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இன்றையதினம் பிரிஸ்பேர்ன் Magistrates நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அப்பெண்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின் இவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Share
