SKIP TO MAIN CONTENT

வரதட்சணை விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்!

The Victorian Government is preparing historic laws aimed at preventing the exploitation by husbands of the dowry system.
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

சீதனம்/வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் இந்தியாவில் காணப்படும் நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக இது குறித்த சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்துவிட்டு, இங்கே தமது மனைவிகளை அழைத்துவந்து நிர்க்கதியான நிலையில் விட்டுவிடுவதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இவ்விடயம் மீதான ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார்.

வரதட்சணை விவகாரம் குடும்பவன்முறையின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டே இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விக்டோரியா மாநில அரசின் இம்முடிவை பல சமூக அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

இதேவேளை விக்டோரியா மாநிலத்தில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும்பட்சத்தில், இந்தியாவிற்கு வெளியே வரதட்சணை விவகாரத்தில் சட்டம் கொண்டுவந்த முதல் நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவிற்குக் கிடைக்கும்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now