Medicare levy உயர்த்தப்படுகின்றது
வருடமொன்றுக்கு $21,655 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் மருத்துவ வரி எனப்படும் Medicare levy 0.5% கூடுதலாகச் செலுத்தவேண்டும். அதாவது Medicare levy 2.5% ஆக உயர்த்தப்படுகிறது. ஜூலை மாதம் 1ம் திகதி 2019ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வரும் இவ்வுயர்வினால் அரசு, நான்கு ஆண்டுகளில் $ 8.2 பில்லியன் டொலர்களை மேலதிகமாகப் பெறலாமென எதிர்பார்க்கிறது. மாற்றுத் திறனாாளிகளுக்கான தேசிய காப்பீட்டுத் திட்டத்திற்கு (National Disability Insurance Scheme) அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இவ்வுயர்வினால் வருடமொன்றுக்கு $50,000 சம்பாதிக்கும் தனிநபர் $300.00 மேலதிகமாகச் செலுத்தவேண்டும்.
தடுப்பூசி இல்லை எனில் Family Tax Benefit Part A நிதி குறைப்பு!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால், Family Tax Benefit Part A மூலம் பெற்றோர் அரசின் நிதி குறைப்பை எதிர்கொள்வர். குடும்பம் ஓன்று குறைந்தபட்சம் வாரம் 14 டாலர் குறைப்பை எதிர்கொள்ளும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு 66 மில்லியன் டாலர்வரை தடுத்துவைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The GP Medicare freeze தளர்த்தப்படுகிறது
The GP Medicare freeze எனப்படும், வைத்தியர்கள் medicare இல் அறவிடும் கட்டண உயர்வுக்கட்டுப்பாடு ஜூலை 1 முதல் தளர்த்தப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு வரை அமுலிலிருக்குமென அறிவிக்கப்பட்டிருந்த Medicare freeze இன் அட்டவணையில் உள்ள பிற மருத்துவ சேவைகளுக்கான பயன்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தளர்த்தப்படுகின்றன.
Generic அல்லது பொதுவான மருந்து மற்றும் biosimilar அதாவது உயிரியல் மருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான 5 ஆண்டு ஒப்பந்தமொன்று Medicines Australia வுடன் செய்யப்பட்டுள்ளது. இதனால் $1.29 பில்லியன் டாலர்கள் வரவு செலவுத் திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக 2.8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகளுக்கு, அடுத்த 4 ஆண்டுகளில் $1.4பில்லியன் டாலர் வழங்கப்படவுள்ளது.
Mental Health எனப்படும் மன நல வைத்தியத் துறைக்கு $115 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது.
