SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசு!

Australian dollars
تتحدث حلقة بودكاست لنحكِ عن المال عن أبرز خصائص صناديق السوبر أو التقاعد، لمعرفة كيف يمكن اختيار الصندوق الانسب في أستراليا. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை, பயனாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக விக்டோரிய அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.

இதன்படி, Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கவுள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது.

மின்சாரம் மற்றும் எரிவாயு பாவனையாளர்களின் தவணை கட்டண பற்றுச்சீட்டில், இந்த 50 டொலர் பணம் விலக்களிக்கப்படுவதன் மூலம், இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று விக்டோரிய premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.

விக்டோரிய மாநில தேர்தல் நெருங்கிவருகின்ற வேளையில், premier Daniel Andrews அறிவித்துள்ள இந்த திட்டத்தை கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சியினர், வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளை வேட்டையாடுவதற்காக Andrews அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அப்பட்டமான கையூட்டுமுறை இது என்று கூறியுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதத்திற்கும் டிசெம்பர் மாதத்திற்கும் இடையில் இவ்வாறு இணையத்தளத்தை உபயோகப்படுத்தி தங்களது மின்சாரம் மற்றும் எரிவாயு பாவனையை ஒப்பீடு செய்துகொள்பவர்களுக்கு இந்த 50 டொலர் சன்மானத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ள premier Daniel Andrews, குறிப்பிட்ட இணையத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம் முதல் வருடத்தில் மாத்திரம் 330 டொலர்களை பயனாளர்கள் மீதப்படுத்தமுடியும் என்று கூறியுள்ளார்.

விக்டோரிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய இனாம் வழங்கும் திட்டத்திற்காக 48 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now