SKIP TO MAIN CONTENT

தீ தின்ற பண்ணை விலங்குகளை புதைப்பதற்கு இராணுவ உதவியை கோரும் விக்டோரிய அரசு!

A number of cows are deceased after being euthanased following a bushfire in Coolagolite, NSW. AAP
A number of cows are deceased after being euthanased following a bushfire in Coolagolite, NSW. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

காட்டுத்தீயில் கருகி உயிரிழந்த விலங்குகளை புதைப்பதற்கு விக்டோரிய அரசாங்கம் ஆஸ்திரேலிய இராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.

விக்டோரியாவில் அகோரமான காட்டுத்தீயின் தாக்குதலுக்குள்ளான கிழக்கு Gippsland மற்றும் வடக்கு விக்டோரிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காட்டு விலங்குகளும் பண்ணை விலங்குகளும் பலியாகியுள்ளன.

காட்டுத்தீ அணைக்கப்பட்ட இடங்களில் இந்த விலங்குகளின் பல்லாயிரக்கணக்கான உடலங்கள் அரையும் குறையுமாக கருகிய நிலையில் காணப்படுகின்றன. இந்த உடலங்கள் அனைத்தையும் புதைப்பதற்கு பண்ணைத்தொழிலாளர்களினால் முடியாது என்றும் இராணுவ உதவி தேவை என்றும் விக்டேரிய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரழிவுக்குள்ளான விக்டோரியாவின் கிழக்கு Gippsland பிரதேசத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் தற்போது காட்டுத்தீ அணைக்கப்பட்ட இடங்களில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இருந்தபோதிலும் பெருமளவிலான மேலதிக உதவி தேவைப்படுகிறது.

நாடு முழுவதிலும் காட்டுத்தீ ஏற்படுத்திய அனர்த்தத்தினால் பல கோடி விலங்குகள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now