கொரோனா வைரஸ் தொடர்பில் விக்டோரிய மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முகக்கவச கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிமுதல் விக்டோரியர்கள் supermarket உள்ளிட்ட retail மையங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியத்தேவையில்லை.
எனினும் பொதுப்போக்குவரத்து, taxis, ridesharing சேவைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
இதுதவிர வெள்ளிக்கிழமைமுதல் வீடுகளில் 100 விருந்தினர்கள் வரை ஒன்றுகூடமுடியும். வெளியரங்குகளில் 200 பேரைக் கொண்ட குழுக்களாக ஒன்றுகூட முடியும்.
பணியிடங்களில் 2 சதுரமீட்டர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தொழிலாளர்களை அனுமதிக்க முடியும் என்பது உள்ளிட்ட மேலும் பல தளர்வுகளும் நடைமுறைக்கு வருகின்றன.
அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றுள்ள எவரும் தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் திகதிக்குப் பின்னர் இவ்வாறு 0 தொற்றாளர்கள் என்ற நிலை எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
