SKIP TO MAIN CONTENT

கொரோனா: விக்டோரியாவில் புதிதாக ஒருவருக்கு மாத்திரம் தொற்று! நாளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

Victorian Premier Daniel Andrews addresses the media during a press conference in Melbourne, Monday, October 12, 2020.
Victorian Premier Daniel Andrews addresses the media during a press conference in Melbourne, Monday, October 12, 2020. Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒருவர் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களின் பின் பதிவான ஆகக்குறைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் கொரோனா தொடர்பிலான புதிய மரணங்களும் பதிவாகவில்லை.

இதையடுத்து மெல்பேர்னில் கடந்த 14 நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கையின் சராசரி 8.1ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தப்பின்னணியில் மெல்பேர்னில் நடைமுறையிலுள்ள பல முக்கிய கட்டுப்பாடுகள் நாளை  தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விக்டோரிய மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் எதிர்பார்த்தளவு குறைவடையாததால், பொதுமக்கள் எதிர்பார்க்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்த்தப்படுவது சாத்தியமில்லை என ஏற்கனவே மாநில Premier Daniel Andrews அறிவித்திருந்தார்.

எனினும் வர்த்தகரீதியான தளர்வுகளைவிட சமூக அளவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று எவ்வாறு யாரிடமிருந்து ஏற்பட்டது என்று தெரியாதநிலையில், அக்டோபர் 1-14ம் திகதிகளுக்கிடையில் 17 பேர் இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும், இப்படியான பரவல்களே கட்டுப்படுத்தக்கடினமானவை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாவதாகவும் Daniel Andrews தெரிவித்தார்.

இதுஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூக பரவல் ஊடாக புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now