விக்டோரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து அடுத்த 6 வாரங்களுக்கு மெல்பேர்ன் முழுவதும் மீண்டும் Stage 3 கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி நாளை புதன்கிழமை இரவு 11.59 மணியிலிருந்து மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமென மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
மருத்துவத் தேவை அல்லது பாராமரிப்பு வழங்க, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க, வேலை, உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மீண்டும் Stage 3 கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக Premier Daniel Andrews தெரிவித்தார்.
விக்டோரியா மாநிலம் முழுவதும் தற்போது 772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Stage 3 கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகள்
Banyule, Bayside, Boroondara, Brimbank, Cardinia, Casey, Darebin, Frankston, Glen Eira, Greater Dandenong, Hobsons Bay, Hume, Kingston, Knox, Manningham, Maribyrnong, Maroondah, Melbourne, Melton, Monash, Moonee Valley, Moreland, Mornington Peninsula, Nillumbik, Port Phillip, Stonnington, Whitehorse, Whittlesea, Wyndham, Yarra and Yarra Ranges
Mitchell Shire- Broadford, Kilmore, Seymour, Tallarook, Pyalong & Wallan,
நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்த விபரங்கள்
- வீடுகளுக்கு விருந்தினர்கள் வருகைதர முடியாது.
- வெளிப்புறங்களில் இருவர் மட்டும் ஒன்றுகூடலாம்.
- அத்தியாவசிய தேவைக்காக மாத்திரமே வெளியில் செல்ல முடியும்(வேலை,மருத்துவத் தேவை, பாராமரிப்பு வழங்க, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க)
- உடற்பயிற்சிக்காக நீங்கள் வாழும் பகுதிகளுக்குள் மாத்திரம் வெளியே செல்ல முடியும்.
- உணவகங்கள்- take away மற்றும் delivery மட்டும் அனுமதி
- மதவழிபாடுகளுக்குச் செல்ல முடியாது. இணையவழி சேவை மாத்திரம்
- திருமண நிகழ்வுகளில் 5 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம்.(the couple, two witnesses and the celebrant)
- இறுதிநிகழ்வுகளில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ளலாம்.
- ஆண்டு 11 மற்றும் 12 மாணவர்கள் மாத்திரம் term 3 கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்குச் செல்வர் . Prep –ஆண்டு 10 மாணவர்களுக்கான விடுமுறை ஒருவாரத்தால் பிற்போடப்படுகிறது.
- Pubs, bars, clubs, nightclubs, beauty therapy, tanning, waxing, nail salons, spas, tattoo parlours , massage parlours, gyms, training facilities, pools, outdoor sport, facilities,galleries, museums, national institutions,historic sites, zoos, wildlife parks, petting zoos, aquariums, animal farms, outdoor amusement parks, outdoor arcades,indoor cinemas, drive-in cinemas, concert venues, theatres , auditoriums, libraries, community venues மூடப்படுகின்றன.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
