விக்டோரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததையடுத்து சமூக பரவல் அதிகளவில் இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்ட 10 பகுதிகளிலுள்ள 36 suburbs-க்கு stay-at-home உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இரவு 11.59 முதல் அடுத்த 4 வாரங்களுக்கு குறித்த பகுதிகளிலுள்ளவர்கள் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என மாநில Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
மருத்துவத் தேவை அல்லது பாராமரிப்பு வழங்க, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க, வேலை, கல்வி, உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
அதேபோன்று ஏனைய பகுதிகளில் வாழ்பவர்களும் இந்த suburbs-க்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
stay-at-home உத்தரவு வழங்கப்பட்டுள்ள 10 postcodes விபரங்கள் வருமாறு:
3038 - Taylors Lakes, Keilor Downs, Keilor Lodge, Watergardens
3064 - Craigieburn, Roxburgh Park, Mickleham, Kalkallo, Donnybrook
3047 - Broadmeadows, Dallas, Jacana
3060 - Fawkner
3012 - Maidstone, West Footscray, Kingsville, Brooklyn, Tottenham
3032 - Maribyrnong, Highpoint City, Ascot Vale, Travancore
3055 - Brunswick South, Brunswick west, Moonee Vale, Moreland West
3042 - Airport West, Niddrie, Keilor Park
3021 - St Albans, Kealba, Albanvale, Kings Park
3046 - Glenroy, Hadfield, Oak Park
குறித்த பகுதிகளில் வாழ்பவர்கள் stay-at-home உத்தரவை சரியானமுறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளில் விக்டோரிய பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
