மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுவதாக Premier Daniel Andrews அறிவித்தார்.
கடந்த ஜுன் இறுதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில், regional பகுதிகள்-மெல்பேர்ன் பெருநகரம் என பிரிக்கப்பட்டிருந்த விக்டோரியா மாநிலம், தற்போது ஒன்றாக இணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மெல்பேர்ன் பெருநகரில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக புதிய தொற்றுக்கள் எவையும் பதிவாகாததையடுத்து இம்மேலதிக கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்று இரவு 11.59 மணிமுதல் பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
- மக்கள் தமது வீடுகளிலிருந்து 25 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. இதன்மூலம் விக்டோரியாவின் regional பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு வழியேற்பட்டுள்ளது.
- வீடுகளுக்கு நாளொன்றுக்கு ஆகக்கூடியது இரு விருந்தினர்கள்(மற்றும் dependents) வருகைதரலாம். அவர்கள் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
- வெளிப்புற ஒன்றுகூடல்களில் 10 பேர்வரை கலந்துகொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டில் மாற்றமில்லை.
- உணவகங்கள் உள்ளிட்ட hospitality துறைசார் இடங்களில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உட்புறத்தில் 40 பேரும் வெளியே 70 பேரும் அனுமதிக்கப்படுவர்.
- மதவழிபாடுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளில், உட்புறத்தில் 20 பேரும் வெளியே 50 பேர் வரையிலும் கலந்துகொள்ளலாம்.
- திருமண நிகழ்வுகளில் 10 பேர் கலந்துகொள்ளமுடியும் என்ற கட்டுப்பாட்டில் மாற்றமில்லை.
- Tourist accommodation சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயங்க ஆரம்பிக்கலாம்.
- உடற்பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள், காட்சியகங்கள், நூலகங்கள், சமூக நிலையங்கள் போன்றவை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதேவேளை விக்டோரியா மாநிலம் முழுவதும் கொரோனா பரவலின் வீதம் தொடர்ந்தும் குறைவாகவே காணப்பட்டால், அடுத்தகட்டமாக நவம்பர் 22ம் திகதி மேலதிக கட்டுப்பாட்டு தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என Premier Daniel Andrews தெரிவித்தார்.
எப்படியிருப்பினும் விக்டோரியாவிலுள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் எனற கட்டுப்பாடு இன்னும் சிலகாலத்திற்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
