SKIP TO MAIN CONTENT

விக்டோரியா மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை?

plastic bag ban
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், Takeaway கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்படும் Lightweight பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க Daniel Andrewsதலைமையிலான அரசு  திட்டமிட்டுள்ளதாக Herald Sun செய்திவெளியிட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி Woolworths நிறுவனம் single use பிளாஸ்டிக் பை பாவனையை தடைசெய்திருந்த அதேநேரம் Coles எதிர்வரும் ஜுலை 1ம் திகதியிலிருந்து இத்தடையை அமுல்படுத்தவுள்ளநிலையில், விக்டோரியா மாநிலம் முழுவதும் இத்தடையை அமுல்படுத்துவது குறித்த அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடந்த 2017 அக்டோபரிலேயே இத்தடை தொடர்பில் விக்டோரிய மாநில அரசு கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now