SKIP TO MAIN CONTENT

கொரோனா: விக்டோரியாவில் புதிதாக 428 பேருக்கு தொற்று!மூவர் மரணம்!!

Victorian Premier Daniel Andrews addresses the media during a press conference in Melbourne, Thursday, July 16, 2020. Victoria has recorded 317 new Coronavirus cases overnight. (AAP Image/James Ross) NO ARCHIVING
Source: AAP

1 min read

Published


Skip to article content

விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்த அதேநேரம் 428 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

70 மற்றும் 80 வயதுகளிலுள்ள முதியவர்களே இவ்வாறு மரணமடைந்ததாக மாநிலPremier Daniel Andrews இன்று அறிவித்தார்.

இந்த மரணங்களுடன் விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை புதிதாக இனங்காணப்பட்ட தொற்றுக்களில் 57 ஏற்கனவே இனங்காணப்பட்ட தொற்றுக்களுடன் தொடர்புடையவை என்றும் ஒருவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் ஏனைய 370 தொற்றுக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் Daniel Andrews தெரிவித்தார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now