SKIP TO MAIN CONTENT

விக்டோரிய மாநிலத்தில் இனி 'பாலியல் தொழில் குற்றமல்ல'!

பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Sex work is now decriminalised in Victoria.
Sex work is now decriminalised in Victoria. Source: Twitter/Scarlet Alliance

2 min read

Published

Updated


Skip to article content

இதுகுறித்து முதல் சுற்று சீர்திருத்தங்கள் அடங்கிய சட்டமுன்வடிவு மீதான விவாதம் மாநில நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தநிலையில், 24 க்கு 10 என்ற வாக்கு அடிப்படையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளதுடன், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் விக்டோரியாவில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாலியல் தொழில் தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்ட வரையறைகளானது சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை எனவும், தற்போதைய சூழலுக்கு அவை பொருத்தமற்றவை எனவும் பாலியல் தொழிலாளர் சங்கங்கள்  வலியுறுத்திவந்தன.

தற்போதைய சட்டங்களின்படி விக்டோரியாவில்  street-based அடிப்படையிலான பாலியல் தொழில் ஒரு குற்றமாகும். ஆனால் பதிவு செய்யப்பட்ட பாலியல்விடுதிகள் மற்றும் escort agencies அல்லது தனியார் பாலியல் தொழிலாளியாக சேவைகளை வழங்குவது போன்றவை கடுமையான நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் இது மிகவும் குழப்பகரமான மற்றும் கடுமையான நடைமுறை எனவும், ஏனைய பணியாளர்களைப்போலவே பாலியல் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமெனவும், ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளர் சங்கங்கள்  வலியுறுத்திவந்த பின்னணியில் அரசு படிப்படியாக சட்டமாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

இந்நிலையில் பாலியல் தொழில் பாதுகாப்பானது என்பதை அரசு கொண்டுவரும் சட்டமாற்றம் உறுதிசெய்யும் என விக்டோரிய அரசு தெரிவித்துள்ளதுடன், ஒவ்வொரு விக்டோரியரும் தனது தொழிலில் பாதுகாப்பாக உணர்வதற்கான உரிமை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள சட்டசீர்திருத்தங்கள் டிசம்பர் 2023க்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுள்ள சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு பாலியல் தொழிலாளர்கள், அவர்களது சக நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக விக்டோரிய மாநில அரசு கூறியுள்ளது.

பாலியல் தொழில் குற்றமல்ல என்ற சட்டமாற்றத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த 1995ம் ஆண்டு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now