விக்டோரியா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.
இதன்படி ஜுன் முதலாம் திகதியிலிருந்து ஒன்றுகூடலுக்கான கட்டுப்பாடு 20 பேராக அதிகரிக்கப்படுகிறது.
வீடுகளுக்குள் 20 வரை(வீட்டிலுள்ளவர்கள் உட்பட) ஒன்றுகூடலாம். வெளியரங்குகளிலும் 20 பேர் ஒன்றுகூட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இதுதவிர ஜுன் 1 முதல் beauty & nail salons, spas, tattoo parlours ஆகிய வர்த்தக நிலையங்களும் ஆகக்கூடியது 20 பேர் என்ற அடிப்படையில் மீளத்திறக்கப்படுகின்றன.
அதேபோன்று cafes, restaurants, pubs, community facilities. galleries, அருங்காட்சியகங்கள், நூலகங்கள், மற்றும் இளைஞர் மையங்கள் ஆகியனவும் 20 பேருக்கு உட்பட்டு இயங்கமுடியும்.
Bootcamps, சமய நிகழ்வுகள், real estate ஏலம் போன்றவற்றில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை இருபதாக அதிகரிக்கப்படுகிறது.
இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை ஐம்பதாக அதிகரிக்கப்படுகிறது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
