விக்டோரியாவில் நேற்றையதினம் வீசிய கடும் புயல் காரணமாக ஏற்பட்ட மின் சேதத்தினால் தமது குடிநீர் சுத்திகரிப்பு நடைமுறை பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால் சுமார் 88 suburb-களில் வாழ்பவர்கள் நீரை கொதிக்கவைத்தபின் பயன்படுத்துமாறு Yarra Valley Water அறிவுறுத்தியுள்ளது.
விக்டோரியா முழுவதும் நேற்று வீசிய கடும் புயலால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 4 வயதுச் சிறுவன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். வாகனங்கள் உட்பட வீடுகள் பலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் மின்சேதம் காரணமாக நீர் சுத்திகரிப்பு பொறிமுறை சரியாக இடம்பெறாமல் அசுத்த நீர் குடிநீருடன் கலந்திருக்கும் ஆபத்து உள்ளதால் 88 suburb-களில் வாழ்பவர்கள் குடிக்க, சமைக்க, பல்துலக்க மற்றும் குழந்தைகளை குளிப்பாட்டுதல் போன்ற தேவைகளுக்கான நீரை கொதித்து ஆறவைத்து பயன்படுத்துமாறு Yarra Valley Water அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தலையடுத்து பொதுமக்கள் பலரும் toilet paper-ஐப் போலவே குடிநீர் போத்தல்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்துவருகின்றனர்.
எனினும் இது தேவையற்ற பயம் என அறிவுறுத்தியுள்ள Yarra Valley Water, நீரை நன்கு கொதிக்கவைத்து பயன்படுத்தினால் போதுமானது என வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நீர் சுத்திகரிப்பு பொறிமுறை வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ள Yarra Valley Water, எனினும் மாசடைந்த நீர் சில பகுதிகளில் இன்னமும் கலந்திருக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்தும் கொதித்து ஆறிய நீரைப் பயன்படுத்துமாறு எச்சரித்துள்ளது.
இன்று பிற்பகலுக்குள் நிலைமை முழுமையாக வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீர் மாசு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளின் விபரம் வருமாறு:
- Attwood
- Bayswater
- Bayswater North
- Blackburn
- Blackburn North
- Blackburn South
- Boronia
- Box Hill North
- Broadmeadows
- Bulleen
- Bundoora
- Burwood
- Burwood East
- Campbellfield
- Chirnside Park
- Coburg North
- Coldstream
- Coolaroo
- Craigieburn
- Croydon
- Croydon Hills
- Croydon North
- Croydon South
- Dallas
- Doncaster
- Doncaster East
- Donvale
- Doreen
- Eltham
- Epping
- Fawkner
- Forest Hill
- Glen Waverley
- Greensborough
- Greenvale
- Heathmont
- Kalorama
- Kangaroo Ground
- Kilsyth
- Kilsyth South
- Kingsbury
- Lalor
- Lilydale
- Lower Plenty
- Meadow Heights
- Melbourne Airport
- Mernda
- Mill Park
- Mitcham
- Monbulk
- Mont Albert North
- Montmorency
- Montrose
- Mooroolbark
- Mount Dandenong
- Mount Evelyn
- Mount Waverley
- North Warrandyte
- Nunawading
- Olinda
- Park Orchards
- Plenty
- Research
- Reservoir
- Ringwood
- Ringwood East
- Ringwood North
- Roxburgh Park
- Silvan
- Somerton
- South Morang
- Templestowe
- Templestowe Lower
- The Basin
- Thomastown
- Vermont
- Vermont South
- Viewbank
- Wantirna
- Warrandyte
- Warrandyte South
- Warranwood
- Westmeadows
- Wollert
- Wonga Park
- Yallambie
- Yarrambat
மேலதிக விபரங்களுக்கு: https://www.yvw.com.au/boil-water-notification?fbclid=IwAR3yI7E9I1PfZopUrYFwUYlh2D6a22F7uXjAKXmnvi-Q8lwFGb9S6wzxnAI
