SKIP TO MAIN CONTENT

வரி மோசடி வழக்கு: மெல்பனில் தமிழ் கணக்காளருக்கு 3 ஆண்டு சிறை!

தனது நிறுவனத்தின் வணிக நடவடிக்கை அறிக்கையில் Business Activity Statements (BAS) சட்டவிரோத மாற்றங்களை மேற்கொண்டதன் மூலம் வரி மோசடி (Tax Fraud) செய்தார் என்ற குற்றச்சாட்டில், கணக்காளர் மற்றும் வரி முகவராக கடமையாற்றிய ஒருவருக்கு மெல்பன் Count Court மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Judge gavel with calculator and handcuffs
Wooden judge gavel with calculator and handcuffs on white table background Source: iStockphoto

2 min read

Published

Updated


Skip to article content

2012-ஆம் ஆண்டுக்கும் 2014-ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில், இக்குற்றத்தை இழைத்தார் என்று தொடரப்பட்ட வழக்கில், இம்மானுவல் சாமுவேல் என்பவருக்கு, நீதிமன்றம் மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இவர் தமிழ்ப் பின்னணி கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

தனது நிறுவனத்தின் BAS அறிக்கையை, வரித்திணைக்களத்துக்கு சமர்ப்பிக்காமல், நிதி ஆதாயத்தை ஈட்ட முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில், இம்மானுவேல் சாமுவேலின் நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகைகளை கணக்குப் பரிசோதனைக்கு(audit) உட்படுத்திய ஆஸ்திரேலிய வரித்திணைக்களம், சுமார் இரண்டு லட்சம் டொலர்களை(outstanding debt & penalties) இம்மானுவேல் சாமுவேலின் நிறுவனம் வரித்திணைக்களத்துக்கு செலுத்தவில்லை என தெரிவித்திருக்கிறது.

அதன்பின்னர், இம்மானுவல் சாமுவேல் இரண்டு நாட்களில் சுமார் 66 BAS revisions-ஐ சமர்ப்பித்து, செலுத்தவேண்டிய கடன் தொகையை பூச்சியமாக்குவதற்கு முயற்சித்திருக்கிறார் என  குற்றஞ்சாட்டப்பட்டார்.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை ஆரம்பித்த வரித்திணைக்களம், இம்மானுவேல் சாமுவேல் வரி முகவராகப் பணியாற்றுவதற்கு வழங்கிய அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ததுடன், இந்த விடயத்தினை நீதிமன்றிடம் கொண்டுசென்றது.

நீதிமன்றில் வரி மோசடி வழக்கு தொடுக்கப்பட்டதன் அடிப்படையில், 390,000 க்கும் மேற்பட்ட டொலர்கள் வரி மோசடி தொடர்பில் இம்மானுவேல் சாமுவேலினை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

வரி முகவர்களாகப் பணிபுரிபவர்கள் இழைக்கும் இப்படியான குற்றங்களின் மீது வரித்திணைக்களம் ஒருபோதும் பொறுமை சாதிக்காது என்றும், சட்டத்தின் ஊடாக கடும் நடவடிக்கையை நாடும் என்றும் ஆஸ்திரேலிய வரித்திணைக்கள உதவி ஆணையாளர் Megan Croaker தெரிவித்துள்ளார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now