கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல் தற்போது வரை, மருத்துவமனைகளில் அதீத பணிச்சுமையை எதிர்கொள்ளும் சுகாதாரத்துறை ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதுடன், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் இந்த 3000 டொலர் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள அரச மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் Ambulance சேவையில் பணிபுரியும் ஊழியர்கள்(nurses, midwives, doctors, allied health professionals, paramedics & ward clerks) இக்கொடுப்பனவைப்பெற தகுதிபெறுவர் என தெரிவிக்கப்படுகிறது.
Winter retention and surge payment என்ற இக்கொடுப்பனவைப் பெறுபவர்கள் ஜுலை 1 முதல் செப்டம்பர் 30 வரையான காலப்பகுதிக்குள்ளும் பணியில் தொடர்ந்திருக்க வேண்டும்.
தகுதிபெறும் ஊழியர்களுக்கு 1500 டொலர்கள் முதற்கட்ட கொடுப்பனவாக ஆகஸ்ட் 15ம் திகதி வழங்கப்படும். எஞ்சிய 1500 டொலர்கள் செப்டம்பர் இறுதியில் வழங்கப்படும்.
இந்த நிதியானது மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் ஒன்று என Premier Daniel Andrews தெரிவித்தார்.
இதேவேளை விக்டோரிய மருத்துவமனைகளில் Night shift-இரவுநேர பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்படும்நிலையில், Night shift செய்வதற்கு முன்வருபவர்களுக்கு ஜுலை முதல் இவ்வாண்டு இறுதிவரை இலவச உணவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் Premier Dominic Perrottet, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரச துறை ஊழியருக்கும் மூன்று சதவீத ஊதிய உயர்வையும், முன்னிலை சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3000 டொலர்கள் விசேட கொடுப்பனவு ஒன்றையும் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
