SKIP TO MAIN CONTENT

பெர்த்தில் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு மெல்பன் வந்தவருக்கு கோவிட் தொற்று!

The Mecure Hotel in Perth
The Mecure Hotel in Perth. Source: Supplied

2 min read

Published


Skip to article content

பெர்த்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு மெல்பன் வந்த நபருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெர்த்தின் Mercure விடுதியில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் ஊடாகவே இந்நபருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Mercure விடுதியில் ஏனைய பயணிகளுடன் தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருந்த குறித்த நபர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மெல்பன் திரும்பியிருந்தார்.

இவர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்தவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து உடனடியாக இவரைத் தொடர்புகொண்ட சுகாதாரப்பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பணித்துள்ளனர்.

இதன்படி மெல்பன் திரும்பிய நாளிலிருந்து அவர் தனிமைப்படுத்தலிலே உள்ளதாகவும், இன்றுகாலை அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் விக்டோரிய சுகாதார அமைச்சர்  Martin Foley தெரிவித்தார். அவரது குடும்பத்தினரும் தற்போது கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் Qantas QF778 விமானத்தில் குறித்த நபருடன் பயணம் செய்த அனைவரும் கோவிட் சோதனை மேற்கொள்வதுடன் தம்மைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக Mercure விடுதியில் இந்தியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து அவர்களது அறைக்கு அருகில் தங்கியிருந்த இருவருக்கு கோவிட் தொற்று பரவியிருந்தது.

அதேநேரம் குறித்த தளத்தில் தங்கியிருந்த ஏனையோர் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ள பின்னணியில் அவர்களில் எத்தனைபேருக்கு கோவிட் தொற்று பரவியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now