SKIP TO MAIN CONTENT

கொரோனா: விக்டோரியாவில் புதிதாக 384 பேருக்கு தொற்று! 6 பேர் மரணம்!!

Victorian Premier Daniel Andrews.
Victorian Premier Daniel Andrews. Source: AAP

1 min read

Published


Skip to article content

விக்டோரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532 என்ற அளவில் புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ள அதேநேரம் ஆஸ்திரேலியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளான 4775 பேரில் 769 பேர் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 45 பேர் உட்பட 260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் விதமாக, elective surgery தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் இதிலிருந்து Category 1 மற்றும் Category 2 நோயாளிகளுக்கு மாத்திரம் விதிவிலக்களிக்கப்படுவதாகவும் Premier Daniel Andrews அறிவித்தார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now