விக்டோரியா மாநிலத்தில் நடைமுறையிலுள்ள அவசரநிலை நாளை 13ம் திகதி முடிவடையவிருந்தநிலையில், அதனை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பதாக மாநில Premier Daniel Andrews அறிவித்தார்.
இதேவேளை கடந்த இரவு புதிதாக நான்கு பேர் COVID-19 தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1268 ஆகியுள்ளது.
விக்டோரியாவில் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக காணப்படும் அதேநேரம் 28 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 16 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்றையதினம் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டதாகவும் புதிதாக 7 பேர் மாத்திரமே இனங்காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 2,854 ஆகும். மொத்தம் 24 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
இதேவேளை ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக பதிவாகியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.
Share
