SKIP TO MAIN CONTENT

பாரவூர்தியினுள் மறைந்து குயின்ஸ்லாந்து செல்ல முற்பட்ட விக்டோரிய பெண்ணுக்கு $4000 அபராதம்!

A Victorian woman has been found hiding in a freight truck in an alleged bid to cross Queensland's southern border.
A Victorian woman has been found hiding in a freight truck in an alleged bid to cross Queensland's southern border. Source: Queensland Police/Twitter

1 min read

Published


Skip to article content

சரக்கு ஏற்றிச்சென்ற பாரவூர்தியினுள் மறைந்து குயின்ஸ்லாந்தின் தென்பகுதி எல்லையைக் கடக்க முற்பட்ட விக்டோரியமாநில பெண்ணுக்கு 4003 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை ஏற்றிச்சென்ற 61 வயதான பாரவூர்தி ஓட்டுநருக்கும் 4003 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

51 வயதான இப்பெண், பாரவூர்தியின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் மறைந்தபடி பயணம் செய்ததாகவும், Goondiwindi பகுதியில் பொலிஸார் இடைமறித்து சோதனை நடத்தியபோது இவர்கள் அகப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த இருவருக்கும் அபராதத்துடன் குயின்ஸ்லாந்துக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now