மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் பல நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுவதாக Premier Daniel Andrews அறிவித்தார்.
மெல்பேர்ன் பெருநகரில் கடந்த 14 நாட்களில் பதிவான தொற்றுக்களின் சராசரி 7.5 வீதமாக குறைவடைந்ததையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி இன்று அக்டோபர் 18 இரவு 11.59 மணியிலிருந்து பின்வரும் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
- மெல்பேர்ன்வாசிகள் தமது வீடுகளிலிருந்து 5கிலோமீட்டருக்கு வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு சற்றே தளர்த்தப்பட்டு, 25 கிலோமீட்டர்களுக்கு உள்ளே பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- உடற்பயிற்சிக்காக தற்போது 2 மணிநேரம் மட்டும் வெளியில் செல்லலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
- பொது இடங்களில்(உதாரணமாக பூங்கா அல்லது விளையாட்டு மைதானம்) ஒரே வீட்டிலுள்ளவர்கள் அல்லது இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என அதிகபட்சம் 10 பேர் ஒன்றுகூடலாம்.
- Tennis courts, skate parks, outdoor pools, golf clubs மற்றும் hairdressers மீண்டும் திறக்கப்படுகின்றன.
- Real estate auctions மற்றும் inspections போன்றவை, வெளிப்புறத்தில் ஆகக்கூடியது 10 பேருடன் நடத்தப்படலாம்.
- ஏற்கனவே இயங்கிவரும் Allied health சேவை வழங்குநர்கள் face-to-face சேவையை ஆரம்பிக்கலாம்
இதைத்தொடர்ந்து நவம்பர் 1 முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும். இதன்படி:
- வீடுகளை விட்டு வெளியேசெல்ல காரணம் தேவையில்லை.
- வீட்டிலிருந்து 25 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு நீக்கப்படும்.
- Retail வணிகங்கள் திறக்கப்படும்.
- Hospitality துறை ஆகக்கூடியது உட்புறத்தில் 20 பேருடனும் வெளிப்புறத்தில் 50 பேருடனும் இயங்கலாம்.
- ஒரு நாளைக்கு இரு விருந்தினர்கள்(மற்றும் அவர்களைத் தங்கிவாழ்பவர்கள்) உங்களது வீட்டிற்கு வருகை தரலாம்.
- Beauty மற்றும் personal services மீண்டும் திறக்கப்படும்.
- சமய நிகழ்வுகளில் 20 பேர்(வெளிப்புறத்தில்) கலந்துகொள்ளலாம்.
- திருமண நிகழ்வில் ஆகக்கூடியது 10 பேர்.
- இறுதிநிகழ்வு ஆகக்கூடியது 20 பேர்.
இதேவேளை விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக இருவர் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் தொடர்பிலான மரணங்கள் எவையும் பதிவாகவில்லை.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
