SKIP TO MAIN CONTENT

கொரோனா: விக்டோரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு $5000 அபராதம்!

Victorian premier Daniel Andrews
Victorian premier Daniel Andrews Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 439 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த அனைவரும் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

70 வயதிலுள்ள ஆண்,  80 வயதுகளிலுள்ள 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண், 90 வயதுகளிலுள்ள இரு ஆண்கள் மற்றும் 3 பெண்கள், 100 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 38 பேர் உட்பட 456 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய சுமார் 3000 பேரின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்றதாகவும் இவர்களில் 800 பேர் தமது வீடுகளில் இருக்கவில்லை என தெரிவித்த Premier Daniel Andrews, விக்டோரியர்களின் பொறுப்பில்லாத இந்நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என குறிப்பிட்டார்.

இதையடுத்து வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டவர்கள் அதை மீறினால் கிட்டத்தட்ட 5000 டொலர்கள்($4,957) அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் இவர்கள் உடற்பயிற்சிக்காகக்கூட வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் விதிகளை தொடர்ந்து மீறுபவர்களுக்கு 20000 டொலர்கள்வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now