விக்டோரியாவில் கொரோனா தொற்று தொடர்பில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறிய சுமார் ஆறாயிரத்து 200 பேருக்கு மொத்தம் ஒருகோடி ஆஸ்திரேலிய டொலர்களுக்குமேல் அபராதம் செலுத்ததுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் விக்டோரிய பொலீஸார் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது கட்டுப்பாடுகளை மீறியவர்களாக கண்டுபிடிக்கப்பட்ட விக்டோரியர்களின் இந்த எண்ணிக்கை, நியூ சவுத் வேல்ஸ் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறிய ஆறாயிரத்து 200 பேருக்கு தலா 1652 டொலர் அபராதமும், ஏழு வர்த்தக நிறுவனங்களுக்கு தலா 9913 டொலர் அபராதமுமாக சேர்த்து, மொத்தம் ஒருகோடி மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 791 டொலர்களை செலுத்துமாறு, விக்டோரிய காவல்துறையினரால் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
குயின்ஸ்லாந்தில் 2093 பேருக்கு தலா 1334.50 டொலர் அபராதமும், ஆறு வியாபார நிறுவனங்களுக்கு தலா 6672.50 டொலர்கள் அபராதமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
