கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கென நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டுவரும் நிலையில் விக்டோரியா மாநிலம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாளை -செவ்வாய் இரவு 11.59 முதல் பின்வரும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்படுவதாக மாநில Premier Daniel Andrews அறிவித்தார்.
- வீடுகளுக்கு 5 விருந்தினர்கள் வருகைதர அனுமதி. பொது இடங்களில் 10 பேர் இருக்கலாம்.
- Hiking, golf, fishing போன்ற செயற்பாடுகளில் 10 பேருக்கு மேற்படாமல் ஈடுபடலாம். ஆனால் சமூக இடைவெளி கட்டாயம் பேணப்பட வேண்டும்.
- திருமண நிகழ்வை 10 பேருடன் நடத்தலம்.
- இறுதி நிகழ்வில் indoor -20 பேர்வரையும் outdoor-30 பேர் வரையும் கலந்துகொள்ளலாம்.
- வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தொடரலாம்.
இப்புதிய அறிவுறுத்தல்கள் எதிர்வரும் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் இதையடுத்து மேற்கொண்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் Daniel Andrews தெரிவித்தார்.
இதேவேளை இக்கட்டுப்பாட்டு தளர்வு நடவடிக்கையை கொண்டாட்டத்திற்குரிய அம்சமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ள Premier Daniel Andrews, அனைவரும் சுயசிந்தனையுடன் செயற்பட வேண்டும் எனவும் சமூக இடைவெளி மற்றும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
