SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது!

Premier Daniel Andrews has announced that Victoria's lockdown restrictions will ease from midnight on Wednesday.
Premier Daniel Andrews has announced that Victoria's lockdown restrictions will ease from midnight on Wednesday. Source: Getty Images AsiaPac

2 min read

Published

Updated


Skip to article content

விக்டோரிய மாநிலத்தில் தனிமைப்படுத்தல் விடுதி ஊடாக கோவிட் பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட 5 நாட்கள் முடக்கநிலை இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக எவருக்கும் தொற்று ஏற்பட்டதாக பதிவாகாத நிலையில் இம்முடக்கநிலை முடிவுக்கு வருகிறது.

Holiday Inn கோவிட் பரவல் ஊடாக தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுவந்ததால், மாநிலம் முழுவதும் ஐந்து நாட்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை நீட்டிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இன்று நள்ளிரவுடன் இது முடிவுக்கு வருவதாகவும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் Premier Daniel Andrews அறிவித்தார்.

இதன்படி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற, உடற்பயிற்சி மற்றும் வேலை ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அதேபோன்று வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது.

ஆனால் அனைத்து இடங்களிலும்(சொந்த வீடு தவிர) முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

வீடுகளில் 5 விருந்தினர்களை மட்டுமே கொண்டிருக்கமுடியும். வெளியிடங்களில் 20 பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதிக்கமாட்டார்கள்.

வழிபாட்டிடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பாடசாலைகள், கல்விக்கூடங்கள், உணவகங்கள் உட்பட அனைத்தும் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்கப்படுகின்றன.

மேலதிகமாக என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை dhhs.vic.gov.au எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம். 

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now