SKIP TO MAIN CONTENT

Virgin Australia: அடுத்த மாதம் முதல் நான்கு சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு!

یک هواپیمای شرکت ویرجین استرالیا در فرودگاهی در سیدنی
Source: AAP Image/Peter Rae

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலிய விமான சேவைகளில் ஒன்றான Virgin Australia இரண்டு உள்நாட்டு சேவைகளையும் இரண்டு வெளிநாட்டு சேவைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதேவேளை புதிதாக இரண்டு வெளிநாட்டு விமான பறப்புக்களை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கன்பரா - பேர்த் (from December 6 2019) கோல்கோஸ்ட் - பேர்த் (from 19 January 2020) ஆகிய உள்ளூர் சேவைகளையும் கொங்கொங் - மெல்பேர்ன் (from 11 February 2020) , சிட்னி - கிறைஸ்ட்சேர்ச் (from 29 April 2020) சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரண்டு உள்ளூர் சேவைகளில் போதியளவானோர்  பயணம் செய்வதில்லை என்பது இதற்கான காரணம் என்றும் வெளிநாட்டு சேவைகளை பொறுத்தவரை, கொங்கொங்கில் தற்போது நடைபெற்றுவரும் கலவரங்கள் அந்த நகருக்கான பயணிகள் போக்குவரத்தை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வருடம் முதல் பிரிஸ்பன் - டோக்கியோ சேவையும் மெல்பேர்ன் - பாலி சேவையும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக Virgin Australia தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now