SKIP TO MAIN CONTENT

Virgin Mobile சேவை நிறுத்தப்படுகிறது!

FB
Source: Facebook

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான Optus-இன் கீழ் இயங்கி வந்த Virgin Mobile சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் Virgin Mobile-ஐக் கொண்டு நடத்திய Optus, விரைவில் இதனை நிறுத்தவுள்ள நிலையில், நாடெங்குமுள்ள 36 Virgin Mobile கிளைகள் மூடப்படவுள்ளன. இதன் காரணமாக சுமார் 200 பேர் வேலை இழப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இவர்களில் பலரை Optus நிறுவனம் தனது தேவைக்கு பயன்படுத்தக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.

தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் Virgin Mobile பயன்படுத்திவரும் நிலையில், அவர்களது இணைப்புக்கள் Optus-க்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது.

Virgin Mobile சேவையை நிறுத்துவதால் அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும், ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு பேசப்படும் எனவும் Optus நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது வாடிக்கையாளர்களை NBN சேவைக்கு மாறுமாறு நிர்ப்பந்தப்படுத்திய குற்றச்சாட்டில் Optus நிறுவனத்திற்கு 1.5 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, குறித்த நிறுவனம் Virgin Mobile சேவையை நிறுத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now