SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான விசா எண்ணிக்கை குறைக்கப்படுகிறது!

Health requirement for visa
Health requirement for visa Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதென ஆஸ்திரேலிய அரசு முடிவுசெய்துள்ளது.

நாட்டின் 2018ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது இவ்விடயத்தை அறிவித்தார்.

இதுவரை காலமும் ஆண்டொன்றுக்கு 2300 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான விசா வழங்கப்பட்டுவந்த நிலையில் இதனை 2,100 ஆக குறைப்பதற்கு அரசு முடிவுசெய்துள்ளது.

இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் மெடிகெயார் ஊடாக 416 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சேமிக்கப்படும் நிதி ஏனைய சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now