தொலைக்காட்சியில் உரையாற்றிய விளாடிமிர் புட்டின் கிழக்கு உக்ரைனில் 'ராணுவ நடவடிக்கை'க்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதன் மூலம் உக்ரைனில் அதிகாரப்பூர்வமாகப் போர் தொடங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் Dmytro Kuleba சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் நியாயமற்ற செயல் இதுவென வர்ணித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும் எனவும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான முறையில் பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் செயல்படும் Donetsk நகரில் ஐந்து வெடிப்புகள் நேர்ந்திருப்பதாக வெடிப்புச் சத்தத்தைக் கேட்டவரை மேற்கோள்காட்டி Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் ஒரு மாத நெருக்கடிநிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
