SKIP TO MAIN CONTENT

Vodafone மற்றும் TPG நிறுவனங்கள் இணைகின்றன!

TPG Vodafone logo
Source: New Daily

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான Vodafone Australia மற்றும் TPG Telecom ஆகிய இரண்டும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்நிறுவனம் Telstra, Optus போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் TPG Telecom Ltd என்ற பெயரின் கீழ் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் இவ்விரு நிறுவனங்களும் இணைக்கப்படுவதன் மூலம் இன்னும் சிறந்த சேவையை வழங்க முடியுமென TPG Telecom நிர்வாகி David Teoh தெரிவித்தார்.

இப்புதிய நிறுவனத்துடன் போட்டி போடுவதற்கேற்ற வகையில் Telstra மற்றும் Optus போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது சேவைகளுக்கான கட்டணங்களை பாரியளவில் குறைக்கவேண்டி வரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Vodafone Australia மற்றும் TPG Telecom ஆகியன இணைந்த நிறுவனத்தின் 49.9 வீத பங்குகள் நிறுவனத்திடமும் எஞ்சிய பங்குகள் நிறுவனத்திடமும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 1.9 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் கீழ் iiNet மற்றும் Internode ஆகிய நிறுவனங்கள் காணப்படுகின்ற அதேநேரம் Vodafone Australia நாடு முழுவதும் 6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now